இணையத்தில் உணவை ஆர்டர் செய்து., பார்சலை பிரித்த சமயத்தில் சிறகடித்த 40 கரப்பான்பூச்சி.!! பதறிப்போன வாடிக்கையாளர்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள இணையவழி வாழ்க்கையில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையத்தின் வழியே ஆர்டர் செய்து., அதனை வீட்டின் வாயிலிலேயே பெற்று வருகின்றனர். அந்த வகையில்., உணவு பொருட்களையும் இணையத்தின் வழியாக பெற்று வருகின்றனர். 

அவ்வாறு வரும் உணவு பொருட்களில் சில நேரங்களில் பல்லி., ஈ மற்றும் பிற உயிரினங்கள் சேர்ந்து வருவதாகவும்., இணையத்தில் வரும் பொருட்களை தவிர கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களிலும் சில நேரத்தில் சில உயிரினங்கள் சேர்த்து வருவதும்., இதனால் பதறிப்போகும் வாடிக்கையாளர்கள் தகுந்த நிறுவனத்தின் மீது புகார் செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 

சீனாவில் உள்ள கேங்டாக் மாகாணத்தில் இருக்கும் சந்தோவ் நகரத்தை சார்ந்த பெண்மணி தனது நண்பர்களுக்கு இணையதளம் மூலமாக வாத்துக்கறியை ஆர்டர் செய்துள்ளார். இதனை ஏற்று கொண்ட அந்த நிறுவனம் அவருக்கு வாத்துக்கறியை சென்று வழங்கியுள்ளது. 

வாத்துக்கறி வந்தவுடன் அனைவரும் சாப்பிடுவதற்கு ஆவலாக பொட்டலத்தை பிரிந்தவுடன்., அதில் இருந்த கரப்பான்பூச்சிகளை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனுடன் வந்த பிற பார்சல்களையும் திறந்து பார்த்த போது அதிலும் கரப்பான் பூச்சிகள் இருந்துள்ளது. 

அவர்கள் ஆர்டர் செய்த பொட்டலத்தில் மொத்தமாக சுமார் 40 கரப்பான் பூச்சிகள் இருந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர்., சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும் புகார் வழங்கியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் அங்கு வைரலாகிய நிலையில்., இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

order food online food is totally waste when inside of food by Cockroach


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->