மனதை சந்தோஷமும் பக்குவமும் அடையச்செய்யுங்கள்.! கண்களுக்கு அட்டகாசமான புகைப்படங்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகில் மனிதன் தோன்றிய காலம் முதலாகவே அவனது எல்லைகளை நீட்டித்து அதனை பெரிதாக்க வேண்டும் என்று விரும்பினான். மேலும்., அதன் மூலம் பல இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும்., பலவிதமான பொருட்களையும் இயற்கை அழகுகளையும், அழிவுகளையும் பார்க்க வேண்டும் என்றும் விரும்பினான். அதன் மூலமாக பல இடங்களுக்கு பயணம் செய்து வந்தான்.

தற்போது உள்ள சூழ்நிலையில் வீடுகளில் இருந்தவரே பல இடங்களின் புகைப்படங்களை கண்டு மகிழ்ந்து வருகிறோம்., அந்த வகையில் பல நாடுகளில் இருக்கும் பல்வேறு வகையான நிகழ்வுகளின் தொகுப்பு அடங்கிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றோம். 

கனடா நாட்டில் உள்ள நயாகரா அருவிக்கு கீழே உள்ள கட்டிடமானது பனியால் சூழப்பட்டு இருக்கும் காட்சி.

அயர்லாந்து நாட்டில் இருக்கும் பூங்காவில் பனி படர்ந்து இருக்கும் வேலையில் தனிமையில் செல்லும் நபர். 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பனைமரத்தின் பின்னர் முழு நிலவானது வட்டமாக தோன்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம். 

ஆஃப்ரிக்க கண்டத்தில் உள்ள மால்டா நகரில் இருக்கும் பிரதமர் அலுவலகத்தை மேக மூட்டங்கள் இடி மற்றும் மின்னலுடன் சூழ்ந்திருந்த காட்சி. 

ஸ்காட்லாந்து நாட்டில் இருக்கும் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழத்தின் மீது இருந்து அங்குள்ள இயற்கை காட்சிகளை இரசிக்கும் பெண்.

பின்லாந்து நாட்டில் காணப்படும் அரோரா வடதுருவ ஒளிக்கீற்றுகளை வானத்தில் கண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். 

கிரீஸ் நாடுகளில் கடலின் தெய்வமாக வணங்கப்படும் பொசைடனின் கோவிலுக்கு பின் புறமாக தோன்றிய நிலவு. 

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் லேவண்டர் தோட்டத்தின் அழகிய காட்சி. 

இத்தாலி நாட்டை வண்ணங்களால் அழகூட்டும் அழகிய மலர் தோட்டங்கள். 

சுவிச்சர்லாந்து நாட்டில் இருக்கும் பனி மலைகளுக்கு உள்புறம் அமையப்பெற்றுள்ள பனிக்குகைகள். 

ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் சிறியளவிலான தீவை சூழ்ந்திருக்கும் பவளப்பாறைகள். 

கிரீன்லாந்து நாட்டில் இருக்கும் ஏரியில் உடைத்து மிதக்கும் பனிக்கட்டிகள். 

தென் அமெரிக்காவில் இருக்கும் சிலேயில் வெடித்து சிதறும் எரிமலையின் ஒளிக்கற்றைகள். 

கென்யா நாட்டில் இருக்கும் அம்பொசெலியில் உள்ள தேசிய பூங்காவில் வீரநடை போடும் காட்டு யானை. 

சிலேயில் வறட்சியின் பிடியில் உணவை தேடி அலையும் மாடு.

ஹவாய் தீவு பகுதியில் வெடித்து சிதறிய எரிமலை குழம்புகள்., குழம்புகள் உருவாக்கிய பாதை.  

சுவிச்சர்லாந்து நாட்டில் இருக்கும் காட்டுப்பாதையில் பனி சூழ்ந்து., மேலும் அந்த பாதைக்கு திகிலூட்டிய போது எடுக்கப்பட்ட காட்சி. 

ஹவாய் தீவு பகுதியில் எரிமலை வெடித்து சிதறி., அதில் உள்ள குழம்புகள் ஆறாக சாலைகளை கடந்து ஓடிய போது எடுக்கப்பட்ட காட்சி. 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலோரத்தில் கடற்கரைகளை மிளிரவைத்து அழகூட்டும்  Bioluminescent phytoplankton என்ற உயிரினம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nature images and cute images.


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->