மூன்றாவது முயற்சியில் வெற்றி! ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது நாசா! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா கடந்த 1972 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. அதற்குப் பின் 50 ஆண்டுகளாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் பரிசோதனை முயற்சி நிறைவேறவில்லை. இந்த நிலையில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. 

இந்த திட்டத்தில் ஆர்டெமிஸ்-1 மற்றும்  ஆர்டெமிஸ்-2 என்ற இரு திட்டங்களை நாசா வகுத்துள்ளது. விண்வெளியில் ஏவப்படும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன் அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவில் மேற்பரப்பில் இருந்து 60 மைல்கள் தொலைவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. 

இதன் பயண திட்டம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 3ம் தேதி மீண்டும் விண்ணில் செலுத்ததிட்டமிட்டபோது எரிபொருள் கசிவால் இரண்டாவது முறையாக தள்ளி போனது.

இந்த நிலையில் ஆர்டெமிஸ்-1 இன்று விண்ணில் செலுத்தப்படும் என நாசா விண்வெளி கழகத்தின் மூத்த அதிகாரி ஜிம் ப்ரீ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு ராக்கெட் செலுத்த தயாரான நிலையில் திடீரென ஹைட்ரஜன் வாயு கசிவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். குறைவான அளவில் கசிவு இருப்பதால் அதனை சரி செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். 

ராக்கெட்டில் ஏற்பட்ட ஹைட்ரஜன் வாயு கசிவு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டதால் நிலவில் ஆய்வு பணியை மேற்கொள்ள நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று மதியம் 12:17 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இரண்டு முறை தோல்விக்கு பிறகு மூன்றாவது முறையாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA successfully launched the Artemis1 rocket in third attempt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->