இன்று பூமிக்கு திரும்புகிறது நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆளில்லா ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம், நிலாவை ஆராய்வதற்கும், நிலாவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நோக்கத்துடன் கடந்த நவம்பர் 16ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நவம்பர் 25ஆம் தேதி முதல் நிலவை ஆராய்ச்சி செய்ய தொடங்கிய விண்கலம், மிக அருகில் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்பியது. இதையடுத்து தனது ஆராய்ச்சி பணிகளை நிறைவு செய்த ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையிலிருந்து விலகி பூமிக்கு வரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் விண்கலம் இன்று இரவு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாடாலூப் தீவு அருகே தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பூமியின் வளிமண்டலத்தினை அடையும்போது விண்கலத்தின் சேவை பகுதிகள் எரிந்து விடும் என்பதால் தரை இறங்க 'ஸ்கிப் என்ட்ரி' நுட்பத்தை பயன்படுத்தி பாராசூட் உதவியால் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கும் என நாசா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA Artemis spacecraft back to earth today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->