விபத்தால் 27 வருட கோமாவில் இருந்த தாய்! முதல் முதலாக கூறிய அந்த வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைந்த மகன்!! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அமீரகத்தில் வசித்து வருபவர் முனிரா அப்துல்லா. இவர் கடந்த 1991ம் ஆண்டு தனது  4 வயது மகன் ஒமர் உடன் காரில் சென்றபோது, திடீரென பள்ளி பேருந்து ஒன்றில் மோதி விபத்து நேர்ந்தது. அந்த விபத்தில் ஒமரை பாதுகாப்பாக காப்பாற்றுவதற்காக அவனை தன்னுடைய கைகளில் அணைத்தபடி முனிரா விபத்தில் சிக்கியுள்ளார்.

இதனால் பயங்கர காயமடைந்த முனிரா உயிருக்கு போராடிய நிலையில் இறுதியில் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.மேலும் அவரை பல மருத்துவமனைகளுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வந்தநிலையில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை..

மேலும் அவர் இனிமேல் ஒருபோதும் குணமடையமாட்டார்  எனவும் மருத்துவர்கள் கூறி வந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பல வருடங்கள் கடந்த நிலையில்  அவருடைய கை மற்றும் கால் தசைகளுக்கு பல்வேறு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த தாய்  முதன்முதலாக திடீரென தனது மகன் பெயரை 'ஒமர்' என அழைத்துள்ளார். ஆனால் அவருக்கு வேறு எதுவும் பேச தெரியவில்லை.இதனை கண்ட ஓமர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இந்த நிலையில் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு  பேட்டியளித்திருக்கும் ஒமர், தன்னுடைய தாய் பேச ஆரம்பித்தது எனக்கு வானத்தில் பறப்பதை போன்று பெரும்  மகிழ்ச்சியை அளித்துள்ளதாக அவர்  கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother says son name after 27 year goma stage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->