30 லட்சம் கோடி சொத்து... நாட்டின் மொத்த வருமானத்தை உறிஞ்சிய பெரும் பணக்காரர் : இதுவரை கசியாத அதிர்ச்சித்தகவல்..! - Seithipunal
Seithipunal


1916 ஆம் ஆண்டு நூறு கோடி டாலர் சொத்துடைய, உலகின் முதல் பில்லியனராக ராக்பெல்லர் உயர்ந்தார்.

முந்தைய நாளில், எண்ணெய் விலை காரணமாக ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பெருமளவிற்கு உயர்ந்ததால், ராக்பெல்லரின் பங்குகளின் மதிப்பு 499 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது.

மற்ற சொத்துகளோடு சேர்த்து, இவரது மொத்த சொத்து மதிப்பு பில்லியன் டாலர்களைக் கடந்து, இவர் பில்லியனராகிவிட்டதாக, அன்றைய செய்தித்தாள்கள் எழுதியிருந்தன.

சொத்து மதிப்பு அப்போது பில்லியன் டாலர்களைக் கடந்திருக்கவில்லை என்று பின்னாளில், இவர் மகன் மறுப்பு தெரிவித்தாலும், 1998இல் வெளியான, ராக்பெல்லரின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று நூல், 1913இலேயே அவரது சொத்து மதிப்பு 900 மில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

மிக நீண்டகாலம், உலகின் பெரும் செல்வந்தர் என்பதற்கு ராக்பெல்லரையே குறிப்பிடும்படி இருந்த அவரது அன்றைய சொத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 400 பில்லியனுக்கும் (ரூ.30 லட்சம் கோடி) அதிகம்.

கணக்கெழுதுபவராக இருந்து, பெட்ரோலியத்தின் பயன்பாட்டை மிகச்சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்த ராக்பெல்லர், அமெரிக்காவின் மொத்த எண்ணெய் விற்பனையில் 90 சதவீதத்தைக் கைப்பற்றினார்.

முறையற்ற போட்டிகள் குற்றச்சாட்டில் நிறுவனம் கலைக்கப்படுவதற்கு முன்பே ராக்பெல்லர் வணிகத்தைவிட்டு விலகிவிட்டார்.

அவரது ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம், எக்சான், செவ்ரான் உள்ளிட்ட சிறிய நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டபோது, இவரிடமிருந்த பங்குகளின் மதிப்பு மேலும் உயர்ந்தது.

கார்ப்பரேட் ட்ரஸ்ட் என்ற வடிவத்தை உருவாக்கியவரான ராக்பெல்லரின் சொத்து மதிப்பு, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதம்வரை இருந்தது.

அமெரிக்காவின் பில்லியனர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடத்திலிருந்தபோது, அவரது சொத்துகள் ஜிடிபியில் அரை சதவீதம் அளவுக்குத்தான் இருந்தன.

இன்றுவரை ஜிடிபி ஒப்பீட்டு அடிப்படையில் முதலிடத்திலேயே இருக்கும் ராக்பெல்லர், சிக்காகோ பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்களையும் உருவாக்கி, மக்கள் நலப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

millions-of-money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->