எரிபொருள் குழாயில் ஏற்பட்ட பெரும் விபத்து.! 75 பேருக்கு நேர்ந்த சோகம்.!! தீயை அணைக்க தொடர் போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் நொடிக்கு பல விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டு அதனை நாம் செய்திகள் மூலம் அறிந்து கொண்டு இருக்கிறோம்., அந்த வகையில் நடைபெறும் விபத்துகளில் சாலை விபத்துகள் மற்றும் பிற விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இதனால் பல மக்கள் பரிதாபமாக அவர்களின் உயிரை இழக்கின்றனர். 

மெக்சிகோ நாட்டில் உள்ள ஹிடால்கோ மாகாணத்தில் உள்ளது லஹூலிலிபன் நகரம். இந்த நகரத்தின் வழியாக பூமிக்கடியில் எரிபொருளானது குழாய்களின் மூலம் பெரிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

அவ்வாறு செல்லும் குழாய்களை துளையிட்டு., அதில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோலிய பொருட்களை அங்குள்ள மக்கள் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்து வருவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில்., குழாய்களின் மீது துளையிட்டு எரிபொருளை எடுக்கும் சமயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக அங்கு இருந்த 21 பேர் உடல் முழுவதும் எறிந்த நிலையில் பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும்., குழாயின் மீது தீ பரவி ஆங்காங்கே வெடி விபத்தில்., 54 பேர் பலத்த தீ காயம் அடைந்துள்ளனர்.

தகவலை அறிந்ததும் உடனடியாக சம்பவ விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்., உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mexico petrol pipe line fire accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->