துண்டாகி விழும் கை.. சென்சாரை நம்ப முடியாது... தயவு செய்து லிப்டில் செல்லும் போது இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்..!! - Seithipunal
Seithipunal


அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இப்போதெல்லாம் லிப்ட் என்பது அத்தியாவசியமான ஓர் அம்சமாகிவிட்டது. மூன்று நான்கு பிரிவுகளாகக் கட்டப்படும் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் லிப்டின் எண்ணிக்கை பிரிவுகளுக்கு தகுந்தவாறு அதிகரிக்கவும் செய்கின்றது. எனவே அடுக்குமாடிக் குடியிருப்புகளில் லிப்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது.

லிப்டின் தாங்கும் திறனுக்கு மேல் பளுவை ஏற்றக் கூடாது. இதன் காரணமாக லிப்டின் திறன் பாதிக்கப்படும். ஒவ்வொரு லிப்டிலும் அதில் எவ்வளவு எடை ஏற்றலாம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த உச்ச வரம்பைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியமாக அதிகமான அளவில் கனரகப் பொருட்களை லிப்டுக்குள் கொண்டுசெல்ல நினைப்பார்கள். இதன் காரணமாக லிப்ட் பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் இருக்கிறது.

லிப்ட் இயங்கத் தொடங்கும்போதே வித்தியாசமான ஒலி அல்லது குலுங்குவதுபோல் ஆடினால் அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த லிப்டை உடனடியாகப் பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சமயங்களில் லிப்டைத் தொடர்ந்து இயக்குவது ஆபத்தில் முடியும்.

லிப்டிற்குத் தானியங்கி கதவுகள், கைகளால் திறந்து மூடும் கதவுகள், டிரான்ஸ்பரன்ட் எனப் பல வகையிலும் கதவுகள் இருக்கின்றன. எப்படிப்பட்ட கதவுகளாக இருந்தாலும் லிப்டின் கதவுகள் சரியாக மூடாவிட்டால் அதைக் கவனிக்க வேண்டியது அவசியம். கதவுகள் சரியாக மூடாத லிப்டில் செல்வது ஆபத்தானது.

கைகளை நீட்டி கதவை திறக்க முயற்சிப்பது கடுமையான ஆபத்தில் முடியும். சில நேரங்களில் சென்சார் வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும் என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lift sensor failed hand cuts


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->