முத்தமிட்ட காதல் ஜோடிக்கு 21 சவுக்கடி தண்டனை.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் முத்தமிட்ட காதல் ஜோடிகளுக்கு அந்நாட்டரசு 21 சவுக்கடிகளை தண்டனையாக கொடுத்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் உள்ளது. அந்த வகையில் சில நாடுகளில் பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்றவைகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. 

அதேபோல், சில நாடுகளில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், பொது இடங்களில் எச்சில் துப்புதல், பொது இடங்களில் இடையூறு செய்தல், சாலை விதிகளை மதிக்காமல் இருத்தல் போன்றவைகளுக்கும் சில நூதன தண்டனைகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தோனேசியாவில் சூதாட்டம், பாலியல் தொழில், மது அருந்துதல், திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு வைத்துக் கொள்ளுதல் போன்றவைகளுக்கு அந்நாட்டு அரசு சவுக்கடிகளை தண்டனையாக வழங்கி வருகிறது.

இந்த நிலையில் இந்தோனேசியாவில் திருமணமாகாத காதல் ஜோடி காரின் உள்ளே அமர்ந்து முத்தமிட்ட குற்றத்திற்காக 21 சவுக்கடிகளை தண்டனையாக அந்நாட்டு அரசு வழங்கி உள்ளது. அதன்படி பொது இடத்தில் நிற்க வைத்து 21 சவுக்கடிகளை தண்டனையாக வழங்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kissed couples 21 Savukkadi punishment in Indonesia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->