கராசே ஏரி.. ஒருமணி நேரம் இருந்தால் மரணம் .. ஏன்.? - Seithipunal
Seithipunal


இயற்கை நமக்கு ஏராளமான நன்மைகளை செய்தாலும், மனிதர்களான நாம் இயற்கைக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு காரியம் செய்தால் அது இரண்டு மடங்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறிவிடுகிறது.

ஆனால், மனிதர்களால் பாதிப்பு ஏற்பட்டு சுத்தமாக உள்ள ஏரி விஷமாக மாறிவருகிறது. அதாவது, தேவையில்லாத பல பொருட்களை நீர் ஆதாரமாக உள்ள இடங்களில் கொட்டுவதால் அந்த இடம் பாதிப்புக்குள்ளாகிறது.

அந்தவகையில் சுத்தமான ஏரியில் கழிவுகளை கொட்டியதாலும், மனிதனின் தேவைக்காக செய்த செயல்களாலும் கதிரியக்கம் கொண்டதாக மாறிய ஒரு ஏரியைப் பற்றிதான் இன்று தெரிந்து கொள்ளப்போகிறோம்.

மத்திய ரஷ்யாவின் தெற்கு யூரல் மலையில் அமைந்துள்ளது கராசே ஏரி.

1951-ம் ஆண்டு முதல் சோவியத் ஒன்றியத்தால் அணுசக்தி கழிவுகளை கொட்டும் இடமாக இந்த ஏரி பயன்படுத்தப்பட்டது.

அசாதாரணமான அளவு அணுசக்தி கழிவுகளை இந்த ஏரியில் கொட்டியதன் விளைவாக அவ்வேரியில் பெரும் பிரச்சனைகள் உண்டானது. 

மேலும் 1957-ல் கராசே ஏரியின் அருகில் அமைந்திருந்த அணுசக்தி ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. 

அந்த வெடிவிபத்து காரணமாக ஏராளமான கதிரியக்க துகள்கள் ஏரியில் பரவியது.

இதனால் இந்த ஏரியில் உள்ள நீர் மிகவும் கதிரியக்கம் கொண்டதாக மாறியது. 

மேலும், இதன் அருகில் ஒரு மணிநேரம் நின்றாலே உயிரைப் பறிக்கும் அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

khardung lake in russia


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->