கடவுளால் கைவிடப்பட்ட இடம் ஆப்கானிஸ்தான் - ஜோ பைடன் விமர்சனம் - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைத்து ஓராண்டை கடந்துள்ள நிலையில், அந்த நாட்டு மக்கள் வறுமை, அடக்குமுறை போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ நகரில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் குறித்து உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர்,

உங்களில் பலர் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றிருக்கிறீர்கள். நான் அந்த நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றிருக்கிறேன். "அது ஒரு கடவுள் துறந்த இடம். ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்" என்று விமர்சித்தார்.

இந்நிலையில், ஜோ பைடனின் இந்த பேச்சால் தலீபான்கள் கோபமடைந்துள்ளனர். மேலும் இந்த கருத்துக்கு பதிலளித்த தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், அமெரிக்காவில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோற்கக்கூடும் என்ற பயத்திலும், விரக்தியிலும் அவர் இவ்வாறு பேசுகிறார்.

அதோடு இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுபவர்கள் ஆப்கானிஸ்தான் மீதான விரக்தி மற்றும் பொறாமையால் அவ்வாறு செய்கிறார்கள். தலீபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் ஆப்கானிஸ்தானில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் திரும்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joe biden reviews that Afghanistan is god forsaken place


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->