நவீன வரலாற்றின் முதல் பணக்காரர் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பிஜோஸ்: சொத்து மதிப்பு தெரியுமா - Seithipunal
Seithipunal


நவீன வரலாற்றின் முதல் பணக்காரர் எனும் பெருமையை அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பிஜோஸ் பெற்றார். இவரின் சொத்துமதிப்பு 15000 கோடி டாலர் ஆகும்.

நியூயார்க்கில் உள்ள பங்குச்சந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் திடீரென உயர்ந்ததால், ஜெப் பிஜோஸின் சொத்து மதிப்பு 15000 கோடி டாலரை எட்டியது. இது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சொத்தைக் காட்டிலும் 5500 கோடி அதிகமாகும்.

அமேசான் நிறுவனம் 36 மணிநேரம் கோடைகால விற்பனையான பிரேம்டே தொடங்கியுள்ளது. இந்த விற்பனை தொடங்கியதில் இருந்து அமேசான் நிறுவனத்தின் பங்குகள் எகிறன. ஒரு பங்கின் விலை 1,825 டாலராக உயர்ந்தது. இது வழக்கமான விலையைக் காட்டிலும் 56 சதவீதம் அதிகமாகும். இதையடுத்து, ஜெப் பிஜோஸின் சொத்துமதிப்பு 15000 கோடி டாலராக உயர்ந்தது. இது இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் கோடியாகும். இதன் மூலம் உலகின் முதல் பணக்காரர் எனும் பெயரை ஜெப் பிஜோஸ் பெற்றார் என்று புளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் அமெரித்த பெடரல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, அமெரிக்காவின் ஒரு சதவீத பணக்காரக் குடும்பங்கள்தான் நாட்டின் 38.6 சதவீத சொத்துக்களை வைத்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், உலக அளவில் 80 சதவீத மக்களின் வருவாயை இந்த ஒரு சதவீத குடும்பங்கள் ஈட்டி வருகின்றன எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jeff Bezos becomes richest man in modern history, topping $150 billion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->