தமிழுக்கு பெருமை செய்த ஜப்பான் அரசு.!! - Seithipunal
Seithipunal


தமிழ் மொழி உலகளவில் தற்போது பல பெருமைகளை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஜப்பான் நாட்டின் அறிவிப்பு பலகை ஒன்றில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும் படத்தை பதிவிட்டு, ஜப்பான் அரசிற்கு ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார்.

நமது நாட்டில் தமிழ் மொழியை பேசும் மக்கள் பெருமளவில் இருந்தாலும், சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற மற்ற சில நாடுகளில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது. அது தவிர, தென் ஆப்ரிக்கா, மலேசியா, மொரீசியஸ், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும்  பெரும்பாலானோர்களால் பேசப்படும் மொழியாக தமிழ் இருந்துவருகிறது.

Related image

இந்நிலையில் இப்போது ஜப்பான் நாட்டிலும் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. ஜப்பானில் தமிழர்கள் அதிகாகமாக  வசிக்கும் இடங்களில் ஜப்பானிய வரிகளுடன், தமிழ் எழுத்துக்களால் ஆன வரிகளும் இடம்பெற்றுள்ள அறிவிப்பு பலகைகள் தற்போது அங்கு  வைக்கப்பட்டுள்ளன. இது தமிழர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மட்டுமின்றி அனைவரும் பாராட்டி வருகியொன்றனர்.

gv prakash thanks japan for making tamil language in notice board

இந்த புகைப்படங்கள் ஏற்கனவே வலைத்தளத்தை கலக்கி வந்த நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் கண்ணிலும் பட்டுள்ளது, இதனையடுத்து ஜப்பானிய மற்றும் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்ற ஒரு அறிவிப்பு பலகையை ட்விட்டரில் பதிவிட்டு ஜப்பான் அரசிற்கு ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

japan government Glory to tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->