கழுதையும், வரிக்குதிரையும் இணைந்தால் இப்படித்தான் இருக்குமோ! விஞ்ஞானிகளின் புதிய சோதனை - Seithipunal
Seithipunal


தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் என்னவெல்லாம் நிகழக் கூடாதோ அத்தனையும் நிகழ்கிறது. உயிரியல் பரிணாம வளர்ச்சியில் விஞ்ஞானிகள் புதிய புதிய சாதனைகள் நிகழ்த்தி வருகின்றனர். பல உயிரினங்களின் உயிரணுக்களை சேர்த்து இல்லாத ஒரு புதிய உயிரினத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் கழுதையையும், வரிக்குதிரையையும் இணைத்து புதிய உயிரினத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் சோமர்சட் என்ற இடத்தில் உள்ள பண்ணையில் வரிக்குதிரையும், கழுதைகளும் வளர்க்கப்பட்டு வந்தது. அங்கு இருந்த விஞ்ஞானிகள் சிலர், ஸிக்கி என்ற பெண் வரிக்குதிரையையும், ராக் என்ற கழுதையையும் ஆண் இணைத்து ஒரு புதிய உயிரினத்தை உருவாக்க பல நாட்களாக திட்டமிட்டனர்.

விலங்கினங்களில் வரிக்குதிரையும், கழுதையும் ஒரே ஒரே வகையைச் சேர்ந்தது. இதனால் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த எண்ணி வரிக்குதிரையையும், கழுதையையும் இனக்கலப்பில் ஈடுபடுத்தினர்.

இரண்டும் ஒரே வகையைச் சேர்ந்தது என்பதால் ஸிக்கி என்ற பெண் வரிக்குதிரை விரைவில் கருத்தரித்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் ஸிக்கி, அழகிய குட்டி ஒன்றை ஈன்றது. இந்தக் குட்டிக்கு ஸிப்பி என்று ஆய்வாளர்கள் பெயர் சூட்டி உள்ளனர். தற்போது ஸிப்பி  பூரண நலத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary

It's like joining the donkey and the jackal! New test of scientists!

செய்திகள்Seithipunal