இந்தோனேஷியா | நடு கடலில் கவிழ்ந்த படகு! மாயமாய் மறைந்த பயணிகள்! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியா நாட்டில் சிறிய தீவுகள், சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. அங்குள்ள பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி தான் செல்லவேண்டும். 

இதனால் பல முறை நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகி விட்டது. நேற்று அங்குள்ள முனா தீவில் இருந்து சுலவேசி தீவுக்கு 40 பேர் கொண்ட ஒரு படகு சென்றது. 

அந்த படகு தெற்கு சென்சாஷி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால், படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்கள். 

இது குறித்து தகவல் அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். 

மேலும் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் படகில் வந்த பலரும் மாயமாகி விட்டதால் அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. 

தொடர்ந்து அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படகு அதிக பாரம் தாங்காமல் கவிழ்ந்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia boat overturned sea passengers fascinated


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->