உலக அரசியல் விபரீதமானது: இன்று நடந்த நிகழ்வால்.. இனி கார்பரேட்டுகள் இந்தியாவில் அரங்கேற்றப் போகும் களியாட்டம்..? - Seithipunal
Seithipunal


பெய்ஜிங் சீனாவின் சான்யா சிட்டியில் நடைபெற்ற 2017-ம்ஆண்டின் உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மானுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் இதில் கலந்துகொண்டனர். இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மனுஷி சில்லர் (Manushi Chillar) கலந்துகொண்டார்.

இறுதிச்சுற்றில் அவர் வெற்றிபெற்று உலக அழகியாக கிரீடம் சூட்டப்பட்டார். இவர் ஏற்கெனவே இந்திய அழகியாக தேர்வானவர் ஆவார்.

17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மீண்டும் உலக அழகியாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா - பிரியங்கா இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் (1994) , பிரியங்கா சோப்ரா (2000 ), உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டனர்.

குறிப்பாக இது போன்ற அழகி போட்டிகளில் இந்திய பெண்கள் பட்டம் சூடிய பிறகு தான், பன்னாட்டு அழகு சாதன பொருட்களின் விளம்பரம் இந்தியாவில் அதிகரிக்கும்.

முன்பு வரை மஞ்சள் பூசி பளபளப்பான முகதோற்றதில் இருந்த இந்த பெண்களிடம், வெள்ளை தான் அழகு என்பது, பேர் அண்ட் லவ்லி விளம்பரம் மூலமாக மாற்றப்பட்டது.

இது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தெரிவு செய்யப்பட்ட பின் நடந்தது. அதன் பின்னர் வெள்ளை நிறத்திற்கு மட்டுமே மக்கள் மத்தியில் மதிப்பு இருக்கும், கருப்பு வெறுக்க செய்யும் என்ற தாழ்வு மனப்பான்மையை மையப்படுத்தி பிரியங்கா சோப்ரா நடித்த விளம்பரம் சர்ச்சைக்குள்ளானது.

அதன் பிறகு அந்த பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவில் தங்கள் அழகு சாதன விற்பனைக்கு என்று  நிரந்தர இடம் பிடித்து விட்டன.

இந்த நிலையில், இப்போது பல வருடங்களுக்கு பிறகு மக்களிடையே ஆர்கானிக் என்ற இயற்கை பொருட்களின் மீதான தாக்கம் வந்திருக்கிறது.

இதனால் அந்த நிறுவனங்களின் விற்பனையும் குறைந்து விட்டது. மீண்டும் ஒரு அழகியை இந்தியாவில் இருந்து தெரிவு செய்வதன் மூலம் இழந்த மார்க்கெட்டை விளம்பரங்கள் மூலம் மீண்டும் அடைந்து விடலாம் என்பதே அவர்களின் வியாபார தந்திரம்.

இதுதான் காலம் காலமாக நடந்து வரும் உலக அரசியல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India's Manushi Chhillar Wins Miss World 2017 The win comes 17 years after Priyanka Chopra brought home the coveted title in the year 2000.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->