பெருகி வரும் செல்பி மோகத்தால் ,ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த விபரீதம்..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் மலை உச்சியில் ' செல்பி’ எடுக்க முயன்றபோது இந்திய மாணவர் ஒருவர் கடலுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அங்கித் என்ற 20 வயது இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தங்கியிருந்து படித்து வந்தார் .

அவர் கடந்த வாரம்  தனது 4 நண்பர்களுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள  உலகில் மிக சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ள அல்பானிக்கு அருகே  உள்ள ‘தி கேப்’ என்னும்  மலைக்கு சுற்றுலா சென்றார்.

அந்த  மலை மிக உயரமாகவும் செங்குத்தாகவும்  மிகுந்த ஆபத்து மிகுந்ததாகவும் காணப்படும்.

இந்நிலையில் மலையின் பாறைகளை ஒவ்வொன்றாக உற்சாகத்துடன் தாண்டி குதித்துக்கொண்டே அங்கித் அதை ‘செல்பி’யாக படம் பிடித்தார்.

இவ்வாறு அவர் மலை உச்சியில்  தாவி ஓடியபோது எதிர்பாராத விதமாக இன்னொரு பாறையில் கால்களை வைக்க முடியாமல் நழுவி தவறி அங்கிருந்த கடலுக்குள் விழுந்தார். 

இதில் பலத்த காயம் அடைந்த அவர் கடலில் மூழ்கி உயிர் இழந்தார். பின் அவருடைய உடல் ஒரு மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்டது.

மேலும் இந்தியாவில் உள்ள இறந்த மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு  ஆஸ்திரேலிய போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் உடன் சென்ற நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian students dead while taking selfi in australia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->