கல்லூரி விடுதியில் அரங்கேறிய கொடூரம்.! உள்ளாடையை தலையில் கட்டவைத்து ராகிங்.!! வெளியான அதிர்ச்சி தகவல் பின்னணி.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் உள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி அமாலி. இவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில்., எனது உள்ளாடையை தலையில் கட்ட வைத்து ராகிங் செய்கின்றனர். அவர்களை எனது இறப்பிற்கு வர அனுமதி அளிக்காதீர்கள். மேல் வகுப்பு மாணவர்களின் ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியுள்ளார். 

இது தொடர்பான வழக்குகளை பார்க்கும் போது., 2018 ம் வருடத்தில் அக்டோபர் முல்லைத்தீவை சார்ந்த 23 வயதுடைய பிரதீபன் என்ற மாணவர்., அங்குள்ள மட்டக்களப்பு ஆரையம்பதி கல்லூரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த 2019 ம் வருடத்தில் ஜனவரி மாதத்தில் ராகிங்கில் ஈடுபட்டதாக சுமார் 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்த 2019 ம் வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் 15 ம் தேதியன்று ராகிங்கில் ஈடுபட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை சார்ந்த சுமார் 54 மாணவிகளுக்கு ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. 

அதே பிப்ரவரி மாதத்தில் ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் ராகிங் சம்பவம் காரணமாக கல்லூரியை காலவரையின்றி நிர்வாகம் மூடியது. 

கடந்த 2018 ம் வருடத்தில் ஏப்ரல் மாதத்தில் 23 ம் தேதியன்று ராகிங்கில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் பயிலும் சுமார் 180 மாணவர்களை கல்லூரியில் நுழைய தடை விதித்து நிர்வாகம் உத்தரவிட்டது. 

கடந்த 2017 ம் வருடத்தில் புதிதாக கல்லூரிக்கு வரும் மாணவர்கள் உள்ளாடையை அணிவதற்கு தடை விதித்ததாக எழுந்த குற்றச்சாட்டில்., சுமார் 18 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள் உட்பட அனைவருக்கும் வகுப்பு தடையானது விதிக்கப்பட்டது. 

கடந்த 2017 ம் வருடத்தின் சமயத்தில் சுமார் 280 ராகிங் குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில்., சுமார் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மேலும்., 1989 மாணவர்கள் தங்களின் படிப்பினை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். 

அங்குள்ள பல்கலைக்கழகங்களில் இருக்கும் கொடிய பழக்க வழக்கமான பக்கெட்டிங் (Bucketing) என்ற கலாச்சாரத்தின் மூலமாக., தங்கும் விடுதியில் மேல் தளத்தில் இருக்கும் மாணவர்கள்., கீழ் தளத்தில் தங்கியிருக்கும் மாணவிகளின் மீது தண்ணீர்., உஜாலா நீளம் மற்றும் சாதத்தின் வடித்த நீர் ஆகியவற்றை ஊற்றும் வழக்கத்தை வைத்துள்ளனர். 

இலங்கையில் இருக்கும் கிழக்கு பல்கலைகழகத்தில் இருக்கும் மாணவர்கள் அங்கு பயிலும் மாணவிகளின் மீது சகதியை ஓடஓட விரட்டி ஊற்றும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. மேலும்., ராகிங்கின் மூலமாக நட்பு வட்டாரங்கள் பெருகும் என்று கூறும் நிலையில்., தனது சொந்தகார பெண்ணின் மீது சகதியை ஊற்றும் போது யாரும் பார்த்து கொண்டு இருக்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இதனால் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக மாணவிகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம்., அவர்களின் குடும்பத்தின் நிலைமை என்று கவலை., கண்ணீர் போன்று பல பிரச்னைகளை இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் ராஜபக்சே இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு ராகிங் செய்வது யாராக இருப்பினும் கன்னத்தில் அரையுங்கள் என்றும்., 24 மணி நேர குற்றசாட்டு தெரிவிக்க 011 - 2123 700 என்ற எண்ணை அறிவித்து குற்றவாளிகளுக்கு சுமார் 10 வருட சிறை தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in srilankan college girl attempt suicide due to ragging


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->