35 மணிநேரம் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை.! குழந்தையின் அதிஷ்டம் போர்வை.!! - Seithipunal
Seithipunal


ரஷியா நாட்டில் உள்ள மேக்னி டோகோர்ஸ் நகரில் இருக்கும் 10 அடுக்குமாடி குடியிருப்பானது திடீரென இடிந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த கட்டிடமும்., அதன் அருகில் இருந்த 48 வீடுகளும் சேதமடைந்தன. 

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்., 36 பேர் இடிபாடுகளில் சிக்கி தற்போது வரை அவர்களின் நிலைமை தெரியவில்லை என்றும்., இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்., இறந்தவர்களின் உடலை பார்த்த உறவினர்கள் கதறியலும் கட்சி அங்குள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அங்குள்ள பகுதியில் -17 டிகிரி குளிர் வெப்பநிலை நிலவிவரும் நிலையில்., மீட்பு படையினர் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடிபாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது., அங்குள்ள இடிபாடுகளில் இருந்து குழந்தையின் அழுகுரலை அதிகாரிகள் கவனித்துள்ளனர். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக குழந்தையை இடிபாடுகளில் இருந்து தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்டு மருத்துவமணையில் அனுமதித்தனர். 

குழந்தையை மீட்ட அதிகாரிகள் குழந்தை உயிருடன் மீட்டதற்கு பெரும் மகிழ்ச்சியடைந்தனர்., மேலும் குழந்தையை மீட்ட போது குழந்தையை சுற்றி படுக்கையானது கவசம் போல பாதுகாத்ததால் குழந்தைக்கு பலமான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். 

குழந்தையின் தாய் விபத்தில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில்., தனது குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்த தாயார் இன்ப அதிர்ச்சியுடன் மருத்துவமனைக்கு விரைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Russia a building collapse a baby rescued successfully after 35 hrs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->