துடிதுடித்து இறந்த திமிங்கலம்.! வயிற்றல் இருந்து எடுக்கப்பட்ட 80 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்.!! திமிங்கலத்தின் கண்ணீர் கதறல்கள்.!! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய திமிங்கலத்தை அங்குள்ள அருங்காட்சியக பணியாளர்கள் மீட்டுள்ளனர். இறந்த திமிங்கலத்தின் வயிறு முறையற்று இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அவர்கள்., திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். 

அதன்படி., திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்த சமயத்தில் திமிங்கலத்தின் வயிற்றல் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் சுமார் 16 அரிசி பைகள்., ஷாப்பிங் பைகள் போன்று பல பிளாஸ்டிக் பைகள் இருந்துள்ளது. 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்த காட்சிப்பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்தாவது., திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை கண்டு அதிச்சியடைந்தோம். 


பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த பிரச்சனையானது பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில்., இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும்., இந்த பிளாஸ்டிக் பொருட்களில் பெரும்பாலானவை சீனா., இந்தோனேசியா., பிலிப்பைன்ஸ்., தாய்லாந்து மற்றும் வியட்னாம் போன்ற நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவை என்றும்., சுமார் 80 கிலோ கழிவுகள் இறந்த திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Philippians a blue whale died by eating plastic


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->