கணவன் மற்றும் காதலனால் 3 வருடங்களில் கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்ட பெண்களில் புள்ளிவிபரம்.! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!! - Seithipunal
Seithipunal


இலண்டன் நாட்டில் கணவன்., காதலன் மற்றும் முன்னால் காதலனால் கொலையான பெண்கள் குறித்த கணக்கெடுப்பானது நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 35 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

மேலும்., கொலையான பெண்களில் பலரை பெண்களின் காதலன் அல்லது கணவன் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு உட்படுத்திவிட்டு., கொடூர கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவங்கள் அரங்கேறும் முன்னதாக சுமார் 8 பெண்கள் தங்களின் கணவர் அல்லது காதலர் மீது தனக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த கொலை சம்பவங்கள் இலண்டனை தவிர பிரிதியவனியாவில் சுமார் 3 வருடங்களில் 55 பேங்கில் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு கொலையாகும் பெண்களின் சில கணவர்கள் மீது ஏற்கனவே வேறு சில பெண்களை கொடுமை படுத்தியதாக வழக்குப்பதிவு இருந்துள்ளது. 

அவ்வாறு வழக்குப்பதிவு உள்ள நபர்களில் பெரும்பாலானோர் சுமார் 3 வருடங்கள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலையான பெண்களில் பலர் தங்களுக்கு நெருக்கமான கணவர்., காதலர் மற்றும் முன்னர் காதலர் போன்றோரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலையான பெண்களில் பலர் தங்களிற்கு நெருக்கமானவர்களால் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு., பிற துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. 

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக பாலியல் ரீதியிலான வழக்குகளில் கைதான குற்றாவளிகள் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு கண்காணிக்கப்படும் நிலையை., பெண்களை துன்புறுத்தும் நபர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் தெரிவித்ததாவது., இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் ஆர்வமாக உள்ளனர்., அதன் மூலமாக குற்றவாளிகளுக்கு தகுந்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in London woman murdered by her husband and lovers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->