டெங்கு காய்ச்சலுக்கு ஒரே மாதத்தில் 133 பேர் பலி.! 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்பு.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் கடந்த வருடத்தில் இறுதி பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நிலநடுக்கம் மற்றும் அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். மேலும்., பலர் சுனாமியில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரும் சேதத்தில் இருந்து அங்குள்ள மக்கள் மெல்ல மெல்ல மீண்டும் வரும் நேரத்தில்., சுனாமிக்கு பின்னர் சில நாட்கள் கழித்து தொற்று நோய்கள் பரவ தொடங்கியது. இதனை தடுப்பதற்காக அங்குள்ள மருத்துவர்கள் தொடர்ந்து பல உதவிகள் மக்களுக்கு செய்து வந்தனர். 

அந்த வகையில்., தற்போது டெங்கு காய்ச்சலானது அதிகளவில் தீவிரமாக பரவ தொடங்கியது., இதன் காரணமாக பலர் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகி வருகின்றனர். மேலும்., சிகிச்சை பெற்று வரும் மக்களில் பெரும்பாலானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில்., இந்தோனேசியாவின் நோய் தடுப்பு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த மாதத்தில் சுமார் 133 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும்., தற்போது வரை மொத்தமாக 13 ஆயிரத்து 683 நபர்கள் காய்ச்சல் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளதாகவும்., காய்ச்சலில் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Indonesia people affect dengue fever and 133 people died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->