சாலையில் ஆறாக ஓடிய சாக்லேட்.!! எச்சிலாய் ஊறியும் "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை".!! - Seithipunal
Seithipunal


 

ஜெர்மனி நாட்டில் உள்ள வெஸ்டான்னேன் என்ற இடத்தில் இருக்கும் ட்ரேமேய்ஸ்டெர் என்கிற சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் தினமும் சாக்லெட்களானது தயாரிக்கப்படும். அவ்வாறு தயாரிக்கப்படும் சாக்லேட்களுக்கு தேவையான திரவ நிலையிலான சாக்லேட் பிரமாண்டமான கலங்களின் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும். 

அந்த வகையில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த கலன் நேற்று திடீரென வெடித்தது. இந்த விபத்தில் திரவ நிலையில் இருந்த சாக்லேட் அனைத்தும் சாலையில் வெள்ளம் போல ஓடத்துவங்கி., பின்னர் குளிரினால் இறுகியது. 

இதன் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் ஏதும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சாலையில் வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் சாக்லேட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த பணியில்., தீயணைப்பு வீரர்களும் அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் சேர்ந்து மண்வெட்டி., நெருப்பு மற்றும் சுடுநீரின் உதவியுடன் சாலைகளை நீண்ட நேர சிரமத்திற்கு பின்னர் சுத்தம் செய்தனர். இந்த விபத்தில் சுமார் ஒரு டன் அளவிலான சாக்லேட்கள் சாலையில் கொட்டியது. 

இது குறித்து கருத்து தெரிவித்த சாக்லேட் நிறுவனமானது., இந்த எதிர்பாராத விபத்தினால் சாக்லேட் தயாரிப்பில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IN GERMANY A CHOCOLATE IS ON ROAD


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->