தாயின் கருவறையில் அன்பு சண்டையிட்ட இரட்டை குழந்தைகள்.! வெளியான மகிழ்ச்சியூட்டும் வைரல் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


நாம் வாழ்ந்து வரும் இந்த உலகை சுற்றி பல விதமான விசித்திர நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்., நடைபெறும் சம்பவங்கள் சில பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும்., சில நகைசுவையிலும் முடிவது உண்டு. 

அவ்வாறு நடைபெறும் சம்பவங்களில் சில வியப்பில் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். சில திகைப்பில் ஏற்படும் வண்ணம் இருக்கும். அதனை போன்ற சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. அந்த வகையில்., தாயின் கருவறையில் உருவாகும் குழந்தையின் அழகை தாய் ஸ்கேன் மூலம் கண்டு மகிழ்ச்சியடைவதற்கு உள்ள இணையை அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நபர்களால் மட்டுமே உணர இயலும். 

சீனாவில் உள்ள பெண் கர்ப்பமாக இருந்த நிலையில்., அவரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு இரட்டை குழந்தை உள்ளதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு தேவையான தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில்., அவர் குழந்தையின் நலன் குறித்து அறிய ஸ்கேன் செய்துள்ளார். 

நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில்., அவரது குழந்தையின் நலன் குறித்து ஸ்கேன் செய்த சமயத்தில் அவரது வயிற்றல் இருந்த இரட்டை குழந்தைகள் ஒன்றுக்கொன்று அன்பாக சண்டையிடும் காட்சியை கண்டு பெரும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இதனை கண்டு மருத்துவர்களும் பெரும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகவே., அதனை மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியுடன் காட்சிப்பதிவு செய்துள்ளார்.  

தற்போது அவருக்கு பிரசவம் ஏற்பட்டு இரண்டு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமான நிலையில் பிறந்துள்ள தருணத்தில் அவர்கள் இருவருக்கும் செர்ரி மற்றும் ஸ்டாபெர்ரி என்று பெயரிட்டு உள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகளை தற்போது இணையத்தில் பதிவு செய்ததை அடுத்து., இது வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china a girl pregnant twins fight between them in mother stomach


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->