இளம் வயதுடைய தாயாருக்கு குடும்ப உறவினர்களின் முன்னிலையில் நடைபெற்ற கொடூரம்.!! கைதட்டி கொண்டாடிய அவலத்தில் நேர்ந்த துயரம்.!! - Seithipunal
Seithipunal


பிரிட்டிஷ் நாட்டில் இருக்கும் லிங்கன்ஷியர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பெத்தான் காஸ்கின் (வயது 24). இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். 

கடந்த பிப்ரவரி மாதத்தில் 22 ம் தேதியன்று குடும்ப விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டு., அந்த விழாவுக்கு இவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர். அந்த விழாவில் சில போட்டிகளும் நடைபெற்றது. 

அந்த போட்டியில் கேக்குகளை யார் அதிகளவில் வாயில் வைத்திருக்க முடியும் என்று போட்டியில் பங்கேற்ற பெத்தான்., வாயில் கேக்குகளை வைத்துள்ளார். அதிகளவு கேக்குகளை உட்கொண்டதை அடுத்து அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் செய்வதறியாது பதறவே., வாயில் இருக்கும் உணவை வெளியே துப்ப முயன்றும் உணவுகள் வெளியே வராமல் இருந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். 

இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை அடுத்து., சுமார் 5 நாட்கள் உயிருக்கு போராடி பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள்., உணவு தொண்டையில் சிக்கி ஏற்பட்ட மூச்சு திணறலின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த அதிர்ச்சி தகவலானது தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில போட்டிகளுக்காக உங்களின் உயிரை பணயம் வைக்காதீர்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in British a girl died by food is thrown into the throat.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->