ஆபாச பட டிவிடிக்களை அளித்த பெற்றோரின் மீது வழக்கு தொடர்ந்த மகன்.! இழப்பீடாக கேட்கும் தொகையை கேட்டு திகைத்துப்போன பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த நாட்டில் பல விசித்திரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு விசித்திரமான சம்பவங்களை அறியும் நாம் அதற்கான கருத்துக்களை தெரிவித்தும் பகிர்ந்தும் வருகிறோம். அவ்வாறு நடைபெறும் சில சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் படியும் உள்ளது. 

இந்தியாவை போன்று சில நாடுகளில் ஆபாச காணொளிகளை பார்க்கும் இணையதளங்களுக்கு அந்தந்த நாட்டின் அரசாங்கம் தடை விதித்தும்., சில நாடுகளில் அந்த இணையதளங்களுக்கு தடை எதுவும் விதிக்கப்படாமலும் உள்ளது. 

அமெரிக்க நாட்டில் உள்ள மிக்சிகன் நகரினை சார்ந்த தம்பதியினர்., இவர்களின் மகனிற்கு கடந்த 2016 ம் வருடத்தில் திருமணம் முடித்து வைத்துள்ளனர். திருமணம் முடித்து இவரது மகனின் வாழ்க்கை நல்ல முறையில் நகர்ந்து வருகிறது என்று பெற்றோர்கள் இருந்துள்ளனர். 

இந்நிலையில்., திருமணம் முடிந்த சுமார் 10 மாதங்களில் தனது மனைவியை விவாகரத்து செய்து பெற்றோரின் இல்லத்திற்கு வந்துள்ளார். அவர்கள் ஏன் அந்த பெண்ணை விவாகரத்து செய்தாய் என்று கேள்வியெழுப்பவே., இதனால் ஆத்திரமடைந்த அவர் வேறு இல்லத்திற்கு சென்றுள்ளார். 

அந்த சமயத்தில் இவரின் பொருட்களில் சுமார் 12 பெட்டிகள் காணாமல் போனதை அறிந்துள்ளார். அவர் அந்த பெட்டியை எங்கு தேடியும் கிடைக்காததால்., அவரின் பெற்றோரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அவர்கள் முன்னிற்கு பின்னர் முரணாக பதில் அளிக்கவே., அவர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இவரின் புகாரை காவல் துறையினர் ஏற்க மறுத்ததை அடுத்து., அங்குள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளர். அந்த வழக்கில் அவர் கூறியிருப்பதாவது., தான் சேகரித்து வைத்திருந்த அறிய வகையிலான ஆபாச டிவிடி கேசட்டுகளை பெற்றோர்கள் எரித்ததாகவும்., அதற்கு தற்போதைய மதிப்பு சுமார் 29 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2017385) இருக்கும் என்பதையும்., இழப்பீடு 86 (இந்திய மதிப்பில் ரூ.5982590) ஆயிரம் டாலர் வழங்க கூறியும் குறிப்பிட்டுள்ளார்.   

இந்த பதிவை ஏற்ற குறித்த நபரின் தந்தை அவரது மகனிற்கு மின்னஞ்சல் மூலமாக பதிலை தெரிவித்துள்ளார். அந்த பதில் அவர் கூறியிருப்பதாவது., உனது உடல் நலம் மற்றும் மன நலத்திற்கான ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டு மட்டுமே அந்த பதிவுகளை அளித்தேன்., நான் இந்த செயலை செய்ததற்கு நீ புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறன் உன்னை நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america son give complaint for her parents when burned illegal videos CD and DVD


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->