ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகள்.! மருத்துவமனையின் வியக்க வைக்கும் அறிவிப்பு.!!  - Seithipunal
Seithipunal


நாம் வாழ்ந்து வரும் உலகை சுற்றி பல்வேறு விதமான வித்தியாசமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில்., நடக்கும் பல சுவாரசியமான சம்பவங்களில் பல ஆச்சரியமூட்டும் வகையில் அமைவது வழக்கம். அதே போன்று அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸுகள் 9 பேர் ஒரே நேரத்தில் கருத்தரித்துள்ள ஆச்சரியம் நடந்துள்ளது. 

அமெரிக்க நாட்டில் இருக்கும் போர்லாண்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் 9 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில்., அனைவரும் தங்களின் கணவருடன் வசித்து கொண்டு வருகின்றனர். 

இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கும் நிகழ்ச்சியானது நடந்து பலரை ஆச்சரியத்தில் மூழ்ங்க வைத்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒன்றாக பிறக்காத சகோதர சகோதரிகள் என்ற குறைமட்டும்தான். 

பணி நேரத்திலும் சரி பிற நேரத்திலும் சரி அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கும் நல்ல நண்பர்கள் மற்றும் தோழர்கள் என்று தான் கூற வேண்டும்., இவர்களில் முதலில் ஒரு பெண் கருவுற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து அனைவரும் கருத்தரித்துள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை தொடர்ச்சியாக குழந்தைகள் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார். இவர்கள் அடுத்தடுத்து விடுமுறையில் செல்ல இருப்பதால்., செவிலியர்கள் பணிக்கு தற்போது ஆட்கள் தேவைப்படுகிறது. 

இவர்களின் புகைப்படத்துடன் தனது வேலைக்கான காலி பணியிடங்கள் குறித்து கூறியுள்ளது. இவர்களின் பிரசவத்திற்கான சிகிச்சையை மருத்துவமனையிலேயே  பெறவும் மருத்துவமனை விருப்பம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america hospital nurse 9 woman pregnant


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->