குழந்தைகளுடன் இன்ப சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட கோர விபத்து.! 5 குழந்தைகள் தீயில்., உடல் கருகி பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் லூசியானா நகரில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் இருந்து அங்குள்ள "டிஸ்னி வேர்ல்டு"க்கு அந்த பகுதியில் இருக்கும் குழந்தைகைளை இன்ப சுற்றுலாவுக்கு வேனில் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. 

அதன் படி இன்று குழந்தைகள் அனைவரும் வேனில் புறப்பட்டு., அங்குள்ள கேன்ஸ் வில்லே என்ற இடத்திற்கு அருகில் சென்றது. அந்த சமயத்தில் அந்த சாலையின் வழியே வந்த இரண்டு லாரிகள் ஒன்றன் பின்னர் ஒன்றாக மோதிக்கொண்டது. 

இந்த லாரிகளுக்கு பின்னால் சென்று கொண்டு இருந்த வேணும் இந்த விபத்தில் சிக்கியது., இந்த வேனிற்கு பின்னால் வந்து கொண்டு இருந்த வாகனங்களும் மோதியதில் வேன் அப்பளம் போல நொறுங்கியது. 

அடுத்தடுத்து மோதிய வாகனங்களால் வேன் திடீரென தீப்பற்றிய எரியத்தொடங்கியது., இந்த விபத்து குறித்து சக வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்பு படையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 5 குழந்தைகள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாகவும்., 8 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்., லாரி ஓட்டுனர்கள் இருவர் இந்த விபத்தில் உடல் நசுங்கி பலியாகினர்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதன் காரணமாக மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அச்சப்படப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america a tourist van accident//. 5 children s died by fire


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->