கூரையை பிய்த்துக்கொண்டு கொடுத்த குருபகவான்.! எவ்வுளவு கொடுத்தார் தெரியுமா?.!! லாட்டரியில் அதிபரான ஊழியர்.!! - Seithipunal
Seithipunal


வளைகுடா நாடுகளில் இருக்கும் பெரும்பான்மை நாடுகளில் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். அங்கு பணியாற்றும் இவர்கள் அந்தந்த நாடுகளில் இருக்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கி குவிப்பது வழக்கம். 

அந்த வகையில் சிலருக்கு அதிஷ்டம் உதவி செய்து அதன் மூலம் லாட்டரிகளில் பணத்தை குவித்தும் வருகின்றனர். கேரளாவை சார்ந்த சரத் புருசோத்தமன் என்பவர் பணிக்காக அபுதாபிக்கு சென்றுள்ளார். 

அப்போது அங்கு விமான நிலையில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரிகளை வாங்கிய பின்னர்., குழுக்கள் முறையில் தேர்வு நடந்துள்ளது. அந்த சமயத்தில் பல முறை லாட்டரிகளை வாங்கி வெறுப்பான இவர் அமைதிகாத்து அங்கேயே இருந்துள்ளார். 

அந்த சமயத்தில் இவரது லாட்டரி எண்ணுக்கு சுமார் இந்திய மதிப்பில் ரூ.28 கோடி பணம் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது. முதலில் இவரது என்னை கூறியபோது ஒரு கணம் பேச்சு மூச்சு இல்லாமல் வாயடைத்த இவரை கண்ட நண்பர்கள் இவருக்கு பரிசு தொகை விழுந்திருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

அன்றைய தினத்தில் நடைபெற்ற லாட்டரி பரிசு தொகையில் வெற்றி பெற்ற 10 நபர்களில் 8 பேர் இந்தியர்கள் என்றும்., அந்த 8 பேரில் 6 பேர் கேரள மாநிலத்தை சார்ந்தவர்கள் என்றும் லாட்டரி நிர்வாக குழு தெரிவித்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in abudapi lottery price won 15 million price money


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->