இலங்கையில் ’ரத்தம் தேவை ...’ ஃபேஸ்புக் பதிவால் உதவிக்குக் குவிந்த மக்கள்! - Seithipunal
Seithipunal


ஈஸ்டர் பண்டிகை தினமான நேற்று இலங்கையில் நடந்தத் தொடர் குண்டு வெடிப்பு சம்வங்களால் சுமார் 290-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம்டைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சுமார் 9 பேர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து எட்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களால் படுகாயமடைந்த மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனைகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின. போதிய இடவசதியின்மை, ரத்தப் பற்றாக்குறை எனப் பிரச்னைகள் இருந்தன.

இதனால், இலங்கை தேசிய ரத்த தான சேவை மையம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருப்போருக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும் விருப்பம் உள்ளவர்கள் தானம் வழங்கலாம் என அறிவித்திருந்தது.

இந்தப் பதிவு ஃபேஸ்புக்கில் வைரலாக உடனடியாக மக்கள் கூட்டம் கூட்டமாக ரத்த வங்கியில் ரத்தம் தானம் செய்ய முன்வந்தனர். மக்களின் ஒற்றுமை குறித்தப் பதிவுகள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

huge member come to donate the blood


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->