கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் இதுதான் அதிசக்தி வாய்ந்தது.! ருத்ரதாண்டவம் ஆடும் மைக்கேல்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் புயல் மையம் கொண்டு இருந்தது. ‘மைக்கேல்’ என்று அந்த புயலுக்கு பெயர் சூட்டி இருந்தனர். அது, அந்த புயல் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்காவை புயல் தாக்கியது.

புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அத்துடன் பலத்த மழையும் பெய்தது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்து வந்தன. இதனால் தண்ணீர் பல இடங்களில் நிலப்பரப்புக்குள் புகுந்தது.

மழைநீர் மற்றும் கடல் நீரால் புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசு கூறி இருக்கிறது.

5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாததால் தவித்து வருகிறார்கள். புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த வாரம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் இதுதான் அதிசக்தி வாய்ந்த புயல் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து புயல் நிலப்பரப்புக்குள் பயணித்து வருகிறது. இதனால் இன்றும் பல பகுதிகளில் இதன் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

English Summary

heavy storm attacked in americaSeithipunal