பிலிப்பைன்ஸ் : துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவத்தினர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசியாவின் தீவு நாடுகளில் ஒன்று பிலிப்பைன்ஸ். இந்த நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பும் இங்கு அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகிறது. 

அதுமட்டுமல்லாமல், அரசுக்கு எதிராக இடதுசாரி கிளர்ச்சியாளர்களும் சில சமயம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கிராமப்புறம் மற்றும் ராணுவ வீரர்களுக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். 

இதன் காரணமாக இந்த நாட்டில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த பகுதியில் சுமார் இருபது பேர் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர். இதைப்பார்த்த ராணுவத்தினர் இந்த கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படு காயம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four army mans died for gun shoot in philippines


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->