திடீரென ஏற்பட்ட மாற்றம்!! உலகத்தின் அழிவு ஆரம்பமா?! கொத்தாக செத்துக்கிடக்கும் விலங்குகள்!! தீவிர சிகிச்சையில் மக்கள்!! - Seithipunal
Seithipunal



ஆஸ்திரேலியாவின் புகழ்மிக்க டார்லிங் நதியானது முர்ரே டார்லிங் நதியின் ஒரு பகுதியாகும். இது பல ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்டதாக்க காணப்படுகிறது. இங்கு மீன்கள் மற்றும் பல நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால், தற்பொழுது ஆஸியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நதியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கியுள்ளன. 

இச்சம்பவம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் 'வெப்பநிலை மாற்றம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து ஆல்கா நச்சாக மாறியதால், மீன்கள் சுவாசிக்க இயலாமல் இறந்துள்ளன' என கூறியுள்ளனர். ஆனால், மக்கள், ' தொழிற்சாலைகளில் இருந்து ஆற்றில் கலக்கும் மாசு தான் மீன்கள் சாவதற்கு உண்மையான காரணம்' என்கின்றனர். 

ஆஸியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாக 40க்கும் மேற்பட்ட குதிரைகள் இறந்துள்ளன. எதிர்பாராதவிதமாக திடீரென வெப்பநிலை குறைந்ததாலும், பருவகால மழை காலதாமதமாக பெய்ததாலும் ஆஸி மிகவும் பாதிப்பிற்குள்ளாக்குகிறது. 

கடந்த 1939 ம் வருடத்திற்கு பின்னர் இந்த வருடம் அப்போதைய வெப்ப நிலையை விட அதிகளவு வெப்பமானது நிலவி வருகிறது என்று தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள 13 நகரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.

மக்கள் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான பீர் வகைகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்., வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக மரங்களின் அடியிலும்., குளிர்சாதன வசதிகளையும் தொடர்ந்து உபயோகம் செய்த வண்ணம் உள்ளனர். 

தொடர்ந்து வீசும் வெப்பக்காற்றின் தாக்கத்தால் பலவிதமான உடல் உபாதைகளுக்கும்., பல நோய்களுக்கும் அங்குள்ள மக்கள் ஆளாகியுள்ளனர்., மேலும்., வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 44 பேர் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், சில காலங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டது. இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் ஆஸ்திரேலியா மிகப்பெரிய பாதிப்புகளை அடையும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fishes are dead gor deat in australia


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->