ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவு பயணம்.! 28ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள ராஷித் ரோவர்.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவு பயணமாக ராஷித் ரோவர் வாகனம் வருகின்ற 28-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.

இது குறித்து துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஷித் ரோவர் வாகனம் ஜப்பான் நாட்டின் ஹக்குட்டோ-ஆர் என்ற லேண்டர் விண்கலத்தில் வைத்து அனுப்பப்பட உள்ளது. 

ராஷித் ரோவர் மற்றும் லேண்டர் விண்கலம் ஆகியவை தற்பொழுது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேப் கார்னிவெல் பகுதியில் உள்ள ஏவுதளத்தில் வைக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கார்னிவெல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலமாக நிலவை நோக்கி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசா பூமியின் சுழற்சியை வைத்து ராக்கெட்டை ஏவுவதற்கு சரியான கோணத்தை கணித்து அதற்கான நாள் மற்றும் நேரத்தை அறிவித்துள்ளது. 

இதன்படி விண்கலம் நிலவின் வடக்கு பகுதியில் தரையிறங்க வேண்டுமானால் வருகிற 28-ந் தேதி அமெரிக்க நேரப்பட அதிகாலை 3.46 (அமீரக நேரப்படி மதியம் 12.46) மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வேண்டும் என நாசா தெரிவித்துள்ளது.

இதனால் வருகின்ற 28-ஆம் தேதி ராஷித் ரோவர் வாகனம் விண்ணில் ஏவப்படயுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நிலவின் மேற்பரப்பு விண்ணில் ஏவப்படும் 28-ஆம் தேதி காற்றின் வேகம், வானில் இடி, மின்னல், மழை போன்ற இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டால் ராக்கெட் ஏவப்படுவது சற்று தள்ளி வைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First UAE mission to the Moon set to launch Rashid rover on November 28


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->