70 இடங்களில் வெடித்த எரிவாயு குழாய்..! பயங்கர தீவிபத்து..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் அமைக்கப்பட்டு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வடக்கு பாஸ்டனுக்கு அருகே 27 கி.மீ. தூரத்தில் இருக்கும் லாரன்ஸ், அன்டோவர், மற்றும் வடக்கு அன்டோவர் ஆகிய 3 நகரங்களில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்தது.

இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே தீப்பற்றி எரிந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கும் அந்த தீ பரவியது. அதை தொடர்ந்து எரிவாயு குழாய் வெடித்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

புகை மூட்டம் மற்றும் தீயில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் பலியானார்.

அதிகாரிகள், கொலம்பியாவில் இருந்து வரும் எரிவாயு குழாயில் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக குழாய் வெடித்து தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

English Summary

fire accident in america

செய்திகள்Seithipunal