இலங்கை குண்டுவெடிப்பு! தனது இரங்கல் பதிவை கிண்டல் செய்தவர்களுக்கு, மூக்குடைக்கும் பதிலடி கொடுத்த பிரபல நடிகை!! - Seithipunal
Seithipunal


நேற்றையதினம் உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.  ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில்  உள்ள கொழும்பு கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்திலும் நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலும்  சிறப்பு பிராத்தனை நடைபெற்றபோது திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.

அதில் இதுவரை மொத்தம் 290 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இத்தகைய குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகம் முழுவதிலிருந்து  பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  இலங்கை குண்டுவெடிப்புக்கு இரங்கல் தெரிவித்து நடிகை ஸ்ரீபிரியாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், இலங்கை குண்டுவெடிப்பு பேரதிர்ச்சி அளிக்கிறது. வேதனைக்குரிய செய்தி. மனிதம் எங்கே போயிற்று என குறிப்பிட்டிருந்தார்.



அந்த பதிவை பலரும் கிண்டல் செய்து மோசமாக விமர்சனம் செய்திருந்தனர்.இந்நிலையில் இதனை கண்ட ஸ்ரீபிரியா அதற்கு பதிலடி கொடுத்து டுவிட்டரில் மீண்டும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.



அதில், இலங்கை சம்பவத்தை பற்றி வருத்தத்தை தெரிவிக்கும் டுவீட்டுக்கு சம்மந்தமில்லாத கிண்டல் மற்றும் கேவலமான கமெண்ட்களை பதிவு செய்யும் மனிததன்மைக்கு எதிரானவர்களை மகிழ்ச்சியுடன் நான் ப்ளாக் செய்வேன் என கோபமாக பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actress answered to netisans for teasinglanka bombplast tweet


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->