பேஸ்புக் விவரங்களை திருடி தேர்தல் முடிவுகளையே மாற்றும் மோசடி..? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வாக்கு பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து தேர்தல் முடிவுகளை மாற்றி வருவதாக புகார் கூறப்பட்டு வரும் நிலையில், பேஸ்புக் மூலம் தகவல்களை திரட்டி அதன் மூலமாக பல நாடுகளின் தேர்தல் முடிவுகளையே மாற்றும் மோசடியில் சில நிறுவனங்கள் களமிறங்கி உள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த மோசடி சம்பவத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு பிரபல நிறுவனம் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற அந்த நிறுவனம் அமெரிக்கா அதிபர் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்களில் மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இந்த நிறுவனம் ட்ரம்புக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. அப்போது 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் விவரங்களை திருடி அதனை மதிப்பிட்டு ட்ரம்ப் தரப்பிற்கு அளித்திருக்கிறது.

வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்ட பின்னர், எதிர்கட்சி வேட்பாளர் குறித்த அவதூறு செய்திகளை தினமும் பரப்பி வந்துள்ளது.

தற்போது, அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு ஊழியர், அங்கு நடந்த சட்டவிரோத செயல்களை, பிரிட்டனின் பிரபல ஊடகம் ஒன்றிற்கு தெரியப்படுத்தி உள்ளார்.

மோசடிகள் ஊடகத்தின் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், பேஸ்புக் நிறுவனம் அந்த நிறுவனத்துடனான உடன்பாட்டை ரத்து செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Facebook security chief changes role to focus on election fraud


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->