கட்டுப்பாடுகளை விதித்த முகநூல் நிறுவனம்.! என்றிலிருந்து நடைமுறைக்கு வருகிறது தெரியுமா?., வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நவநாகரீக காலகட்டத்தில் வாழ்ந்து வரும்., பலகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல வகையான சமூக வலைத்தளங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில்., சமூக வலைத்தளங்களில் இருக்கும் பெரும்பாலனோர் தங்களின் ஆதரவு அமைப்பிற்கு பல வகைகளில் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இந்த ஆதரவு தெரிவிக்கும் நபர்களுக்கு பதில் அளிக்க எதிர் அமைப்பின் ஆதரவாளர்கள் தங்களின் ஆதவரையும்., அவர்களின் கருத்திற்கு எதிரான பதில்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்., உலகம் முழுவதிலும் முகநூல் சமூக வலைத்தளத்தில்  பன்மைத்துவ தேசியவாதத்திற்கு கடுமையான எதிர்ப்பு கருத்துக்கள் தொடர்ந்து அதிகளவில் வந்த வண்ணம் உள்ளது. 

அவ்வாறு வரும் கருத்துக்களின் காரணமாக பல வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறும் வண்ணம் உள்ளது. இதன் காரணமாக எழும் பிரச்சனைகளை குறைப்பதற்கு முகநூல் நிறுவமானது புதிய திட்டத்தை கையாளவுள்ளது. கடந்த 15 ம் தேதியன்று நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் பல உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

அந்த காணொளி காட்சியை நேரலையில் பதிவிட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி., கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே., இதனை கண்ட முகநூல் நிறுவனம் உடனடியாக அனைத்து காணொளி காட்சிகளையும் நீக்கியது. இதனை அடிப்படையாக கொண்டு தேசியவாதத்திற்கு எதிரான கருத்துக்களை தடை செய்வதற்கு புதிய திட்டத்தை உருவாக்க உள்ளது. 

முகநூலை வடிவமைத்த கிறிஸ்டன் கிளெர்க்., முகநூலில் உள்ள சில அம்சங்களை மாற்றுவதற்கு திட்டமிட்டு அவற்றை மாற்றியுள்ளோம். தேசியவாதத்திற்கு எதிரான கருத்துகள் பதிவிடும் நபர்கள் மற்றும் பிற பிரச்சனைகளை மையப்படுத்தி நாட்டில் கலவரங்கள் உருவாக்கும் வண்ணம் ஏதேனும் கருத்துகள் இருப்பின் அவருடைய கருத்துக்கள் உடனடியாக நீக்கப்படும் அல்லது அந்த கருத்துக்களை பதிவுசெய்ய முடியாத சூழல் ஏற்படும். இந்த நடைமுறையானது வரும் வாரம் முதலாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Facebook apply restriction such a spam message


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->