அமீரகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பகீர் தகவல்!  - Seithipunal
Seithipunal


அமீரகத்தில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த இடைவிடாத கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 16ஆம் தேதி ராசன் கைமாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் பயணம் செய்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனை தொடர்ந்து துபாயில் 47 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊழியர் மழையால் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்து விட்டார். 

மேலும் துபாய், சார்ஜ், அஜ்மானில் உள்ள பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அமீரக தேசிய மாநில ஆய்வு மையம் அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதன்படி இன்று லேசான பனிமூட்டத்துடன் வானம் மேக மூட்டத்துடன் 
காணப்படும். அடுத்த வாரம் தொடக்கத்தில் நாடு முழுவதும் பரவலாக லேசான மழை பெய்யும். 

வருகின்ற 23ஆம் தேதி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நாட்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Emirates heavy rain


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->