300 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அபாயகரமான சுனாமி அலைகள் தாக்கக் கூடும்.. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தொடர்ச்சியாக நிலநடுக்க சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பசும்பிக் கடல் பகுதியில் தொடங்கி இப்போது இந்தியகடல் பகுதி வரை அதன் அதிர்வு பிரதிபலிக்கிறது.

பெரு நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்தமான் தீவுகளில் நேற்று இரவு ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.

சரியாக இரவு 9.18 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்ற செய்தி தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கு முன்னதாக பெரு நாட்டை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நேற்று பெரு நாட்டின் மத்திய கடற்கரைப் பகுதியில் 8 மைல் ஆழத்தில் 7 புள்ளி 3 என்ற ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பசுஃபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியில் இருந்து 300 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அபாயகரமான சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake sparks tsunami fears in Peru


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->