இந்தோனேசியா பாலி கடலில் திடீர் நிலநடுக்கம் - சுனாமி ஏற்படுமா? அச்சத்தில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா பாலி கடலில் திடீர் நிலநடுக்கம் - சுனாமி ஏற்படுமா? அச்சத்தில் பொதுமக்கள்.!

இந்தோனேசியா நாட்டில் பாலி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் சக்சி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள மாதரம் பகுதியிலிருந்து வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் கீழேயும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இது இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா, பங்சல் அருகே 525 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.

இதற்கிடையே, கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earth quake in indonesia pali sea


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->