திடீரென வீச தொடங்கும் புழுதி புயல் காற்று.!! வெளியே வர எச்சரிக்கை விடும் அதிகாரிகள்., பதறும் மக்கள்.!!  - Seithipunal
Seithipunal


 

ஆஸ்திரேலியாவில் உள்ள தென்கிழக்கு மாகாணங்களில் நேற்று திடீரென புழுதிப்புயல் வீசத்தொடங்கியது. இந்த புழுதி புயலானது மிகக்கடுமையாக இருந்ததால் வானம் முழுவதும் ஆரஞ்சு மற்றும் செம்மஞ்சள் நிறமாக மாறி காட்சியளித்தது. 

இந்த புழுதிப்புயல் சுமார் 500 கி.மீ பரப்பிற்கு வீசியது. இதன் காரணமாக சிட்னி போன்ற பல நகரங்கள் புயலால் முழுவதுமாக பாதிக்கப்பட்டு., காற்றை சுவாசிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கும்., அச்சத்திற்கும் உள்ளாகினர். 

அங்குள்ள பெரும்பாலான சாலைகளில் வெறும் புழுதி காற்றாக அடித்ததால்., வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் உளர் மண்ணை கிளப்பிய கடுமையான காற்றானது வீசியதால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியது. 

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வறட்சி நிலவி வரும் நிலையில்., இந்த புழுதிப்புயலால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாமல், விமானம் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டன. 

இந்த புயலானது தொடங்கியதை கவனித்த அதிகாரிகள் நல்ல வேலையாக அடுத்தடுத்த தகவல்களை தெரிவித்து மக்களை எச்சரித்ததால் மக்கள் அவர்களின் இல்லங்களிலும்., வணிக வளாகங்களிலும் இருந்து வெளியே வராமல் இருந்தனர். 

இருந்தாலும் இந்த புயலின் தாக்கத்தால் மக்கள் சுவாசிப்பதில் பெரும் சிரமமடைந்தனர்., சில மூச்சு திணறல் காரணமாக பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த புழுதி புயலின் தாக்கம் குறையும் வரை மக்கள் வெளியே வருவதை தவிர்த்துவிடக்கூறி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DUST STORM SUDDENLY CREATE IN AUSTRALIA AND PEOPLE PANIC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->