இந்த கொடுமையை நீங்களே பாருங்கள்.! கூகுளில் முட்டாள் என டைப் செய்தால் வரும் முகத்தை.!! உலகில் பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் கூகுள்!!! - Seithipunal
Seithipunal


நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களும் தற்போது, இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த இணையதளத்தில் உலகின் மிகவும் பிரபலமான கூகுள். இதன் மூலம் எந்த ஒரு செய்தியைத் தேடினாலும் அந்த செய்தி உடனடியாக நமக்கு கிடைத்து விடும். 

மேலும், தற்போது கூகுள் இல்லாமல் இந்த உலகமே இல்லை என்ற அளவிற்கு வளர்ந்து பிரபலமாகியுள்ளது, இந்த இணையதளம். இது தவிர இந்த இணையதலத்தில் பல நன்மைகள் நடப்பது போலவே பல்வேறு தீமைகளும் நடக்கின்றன. இதனால் பெரிய சிக்கலும் சில சமயங்களில் ஏற்படும் வாய்ப்புண்டு.

இந்த நிலையில், கூகுள் இணையதளத்தில், முட்டாள் என்று டைப் செய்து முட்டாள் என்ற வார்த்தையைத் தேடினால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் வந்து நிற்பது மட்டுமல்லாமல் அவரது புகைப்படமும் வருவது, உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் மீது பெரும் அதிருப்தியில் உள்ள சிலர் செய்த சதி வேலைதான் இதற்கு காரணம் என தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக இணையதள போராட்டத்தை மேற்கொள்பவர்கள், ரெட்டிட் எனும் இணையதளத்தில் அவர் படத்துடன் முட்டாள் என்ற வார்த்தையை இணைக்கும் நூதன போரட்டத்தில் இறங்கியுள்ளனர். அது மட்டும் இல்லாமல், இதற்கு பல்வேறு பிரச்சாரங்களையும் சர்வதேச அளவில் வெளிப்படையாகவே அவர்கள் செய்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

donald trump face in google at searching idiot


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->