பெண் நாய் இறந்ததை அறியாமல் பிரிய மறுத்து ஆண் நாய் நடத்திய பாச போராட்டம்.! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸில் சாலை விபத்தில் உயிரிழந்த இணையை அதன் ஆண் நாய் எழுப்ப முயற்சித்த காட்சிகள் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது. 

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் குய்ஸான் நகரத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது பெண் நாய் ஒன்று வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதனுடன் வந்த ஆண் நாய் இதனால் செய்வதறியாது திகைத்து நின்றது. அடுத்த ஒரு சில நொடிகளில் முனங்கியவாறு இறந்து விட்ட நாயை எழுப்ப முயற்சி செய்தது.

தொடர்ந்து கால்களால் தட்டியும், மூக்கால் இடித்தும் வெகு நேரம் நடந்து கொண்டிருந்த நாயின் அந்த செயல்பாடுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

English Summary

dog death in road accidentSeithipunal