டென்மார்க் இரயில் விபத்து.! 8 பேர் பரிதாப பலி., 15 பேர் மருத்துவமனையில் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிரீன்லாந்து மற்றும் பரோயே நாடுகளை உள்ளடக்கிய டென்மார்க் நாடானது இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பிரதான வழியாக இரயில் வழிப்பாதை போக்குவரத்து இருந்து வருகிறது. 

இந்த பாதையில் நேற்று முன்தினம் காலை பயணிகள் இரயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அங்குள்ள உள்ளூர் நேரப்படி காலை சுமார் 7.30 மணியளவில் கிரேட் பெல்ட் பிரிஜ் அருகே வந்து கொண்டு இருந்தது. 

அதே நேரத்தில் மற்றொரு தண்டவாளத்தில் வந்து கொண்டு இருந்த சரக்கு இரயிலின் மீது பயணிகள் இரயிலானது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் பயணிகள் இரயிலில் பயணம் செய்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி அலறி துடித்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

இந்த கோர சம்பவத்தில் தற்போது வரை 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும்., படுகாயமடைந்த 16 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.  

இந்நிலையில்., மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்ட 16 நபர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்., அந்த பகுதியில் வீசும் பலத்த சூறாவளி காற்றின் காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும்., இதன் காரணமாக அந்த பாதைகளில் பயணம் செய்யும் இரயில்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

மேலும்., தண்டவாளத்தில் இருந்து மர்மப்பொருளின் மீது மோதல் இருக்கவே இரயில் ஓட்டுநர் பிரேக் போட்டதாகவும்., அதில் நிலை தடுமாறிய பயணிகள் இரயில் சரக்கு இரயில் மீது மோதியதால் விபத்து நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Denmark train accident 8 peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->