அழகி போட்டில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை! - Seithipunal
Seithipunal


கென்யாவை சேர்ந்த பெண் ரூத் கமான்டே (24 வயது). இவர் பரீத்முகமது (24 வயது) என்ற வாலிபரை காதலித்தார். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அதையொட்டி நடந்த தகராறில் ரூத் கமாண்டே தனது காதலன் பரீத் முகமதுவை 25 தடவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். எனவே கைது செய்யப்பட்ட அவர் நைரோபி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு நடந்துள்ளது.

இந்த நிலையில் பெண் சிறை கைதிகளுக்கான அழகிப்போட்டி நடத்தி உள்ளனர். அதில் ரூத் கமான்டே அழகியாக பட்டம் வென்றார்.

இதற்கிடையே இவர் மீதான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டார்.

அவரது கொடூரமான செயலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருக்கிறார். ஆனால் இந்த தண்டனை மனிதாபிமானம் அற்றது என வலதுசாரி குழுக்கள் கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ரூத் கமான்டே மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது வக்கீல் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death penalty for a woman in beauty contest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->