மருத்துவர் ராமதாஸ் உணர்த்திய விபரீத நிலை..? சாதித்து காட்டிய சீனா - சோதித்தாவது பார்க்குமா இந்தியா..? - Seithipunal
Seithipunal


சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும் டிக் டாக் செயலியை கடுமையான கண்காணிப்புக்கும் தணிக்கைக்கும் உள்ளாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை விடுத்திருந்தார்.

அதில், இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் கருவி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட  டிக் டாக் எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது. எந்த வித ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படாமல், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் டிக் டாக் செயலி செயல்படும் விதமும், அதில் இளைய தலைமுறையினர் வாழ்க்கையைத் தொலைப்பதும் கவலையளிக்கிறது.

முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகமான டிக் டாக் என்ற பெயரிலான செல்பேசி செயலி கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட டிக் டாக் செயலி, இப்போது ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

டிக் டாக் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யும் உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்பதால், இளம்பெண்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களைப் பாடுவது, திரைப்படங்களில் வரும்  பாடல்களுக்கு ஏற்ற வகையில் அருவருக்கத்தக்க வகையில் அங்க அசைவுகளை செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் இடம்பெறும் பல பதிவுகள் பெண்களை இழிவுபடுத்துகின்றன.

டிக் டாக் செயலி அதன் பயனாளிகளிடம் ஒரு விதமான போதையை ஏற்படுத்துகிறது. இளைய தலைமுறையினர் பதின்வயதில் இத்தகைய கவனச் சிதறல்களுக்கும், திசை மாறுதல்களுக்கும்  உள்ளானால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

இதைத் தடுக்க டிக் டாக் செயலியை கடுமையான கண்காணிப்புக்கும், தணிக்கைக்கும் உள்ளாக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக டிக் டாக் செயலியின் தீய விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கும், இளையதலைமுறையினருக்கும் பெற்றோர் எடுத்துக் கூறி அவர்களை இந்த போதையிலிருந்து மீட்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், "டிக் டாக்" ஆபாச பாணியில் ஆடை அணிந்து வீடியோ வெளியிடுவது, தகாத வார்த்தைகளை பேசுவது ஆகியவற்றிற்கு தடை விதித்து சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 "டிக் டாக்" உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளுக்கு 100 கட்டுப்பாடுகளை விதித்து சீனா ஒழுங்கு நடைமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஆபாச உடைகளை அணிவது, ஆபாச பேச்சுக்களை பேசுவது, மத அல்லது சமூக வெறியை தூண்டுவது, பணத்தை வணங்குவது, கம்யூனிஸ்ட் உடைகளை அணிந்துகொண்டு வீடியோ வெளியிடுவது, தைவான் சுதந்திரம் தொடர்பாக கோஷமிடுவது உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியாவும் விதிக்க வேண்டும் என தொழில்நுட்ப ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china-asks-tiktok-like-app-makers-to-review-users


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->