பெற்றோர்களே உஷார்.! உங்களால் தான்  குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


பெற்றோர்களே உஷார்.! உங்களால் தான்  குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!! 

தற்போது மிக குறைவான விலையில் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. அதிலும் இந்தியாவில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போனை பயன்படுத்துகின்றனர். 

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்மார்ட் போன் தீங்கைதான் ஏற்படுத்துகிறது. அறிவார்ந்த செயல்களுக்கு 20 சதவீத மக்கள் கூட பயன்படுத்துவதில்லை. குழந்தைகள் கேம் விளையாடுகின்றனர். இlஞர்கள்   சமூக ஊடகங்களில் தங்களின் பொன்னான நேரத்தை கழிக்கின்றனர். இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைகிறது.

குறிப்பாக பெற்றோர்களின் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவதால் தான் குழந்தைகளின் நலன்,  நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து அமெரிக்காவின் இல்லினாய்வ் மாகாண பல்கலைக் கழகம் மற்றும் மிக்சிகன் பல்கலைக் கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகளில் அவர்கள் கூறியதாவது:-  

இந்த ஆய்வானது மொத்தம் 172 குடும்பத்தினரிடம் நடத்தப்பட்டது. அதில் பெற்றோருடன் 5 வயது மற்றும் அதற்கு குறைந்த வயது குழந்தைகள் பங்கேற்றனர்

பெற்றோர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம்  9 மணி நேரத்தை மின்னணு சாதனங்களான தொலைக்காட்சி பெட்டி, கணிப்பொறி மற்றும் ஸ்மார்ட் போன்களில் செலவிடுகின்றனர். மேலும்  குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடும் நேரம், விளையாடும் நேரம், மற்றும் உறங்கும் போதும்  மின்னணு சாதனங்களை பயன்படுத்துகின்றனர்.

பெற்றோர்களை நன்கு கவனித்து வரும் குழந்தைகள் தாங்களும்  அதே நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர்.  இதனால் குழந்தைகள் அறிவுப்பூர்வமான செயல்களில் ஈடுபடாமல் இது பொழுது போக்கு சாதங்களில் நேரங்களை வீணாக்குகின்றனர். இதனால் இதனால் குழந்தைகளின் படிப்பும், உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.  எனவே பெற்றோர்கள் குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி பழக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Child to change for our parents


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->