கருப்பின கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்க காவல் அதிகாரி! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா ஓஹியோ மாநிலத்தில் கருப்பு இனத்தைச் சேர்ந்த டாகியா யங் (21 வயது) என்ற கர்ப்பிணி பெண் ஆக. 24 அன்று தனது கருப்பு நிற செடான் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். 

இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. காவல்துறையினர் ஒரு குற்ற விசாரணைக்காக அவர் சென்று கொண்டிருந்த காரை தடுத்து நிறுத்தினர். 

டாகியா காரை நிறுத்தியதும் போலீசார் காரில் இருந்து அவரை இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால் டாகியா இதற்கு மறுப்பு தெரிவித்ததால் காவல் அதிகாரிகள் நீங்கள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இங்கிருந்து போக வேண்டாம் என உத்தரவிட்டனர். இதனை மறுத்த டாகியா காரை இயக்க முயன்றார். உடனே காவல்துறை அதிகாரி அவரது காருக்கு முன்னே சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். 

ஆனால் டாகியா அதனையும் அலட்சியமாக எடுத்துக்கொண்டு காரை ஓட்ட தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் அதிகாரி அவரை நோக்கி சுட்டதால் அந்த கார் நிலை தடுமாறி சுவரின் மீது மோதி நின்றது. 

பின்னர் அதிகாரி டாகியாவை காரில் இருந்து வெளியேற்ற முயற்சித்த போது காரின் கதவு திறக்க முடியாததால் கண்ணாடியை உடைத்தனர். 

அப்போது டாகியா மற்றும் அவரது கருவில் இருந்த குழந்தை உயிரிழந்துவிட்டது. இதனை அடுத்து ஒரு கர்ப்பிணியை கொன்ற காவல் அதிகாரி ஊதியத்துடன் கூடிய விடுப்பில் பணியில் இருந்து அனுப்பப்பட்டது. 

ஓஹியோ மாநிலத்தில் இந்த சம்பவம் குறித்து குற்ற விசாரணை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

அமெரிக்க காவல்துறை கருப்பர் இன மக்கள் மீது சமீப காலங்களில் குற்ற நடவடிக்கைகளின் போது மிக கடுமையான முறையை கையாள்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

black pregnant woman shooting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->