புதிய ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தடை..! ரூ.2000 ரூ.500 ரூ.200 நோட்டுகள் செல்லாதா..? அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு, அதற்கு பதிலாக புதிய ஐநூறு மற்றும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய ரூபாய் நோட்டுகள் நேபாளத்திலும் செல்லும் என்பதால், அந்த நேரத்தில் ஏராளமான இந்திய ரூபாய் நோட்டுகள் நேபாள ரிசார்வ் வங்கிக்கு வந்து சேர்ந்தது. இதனை இந்திய ரிசர்வ் வங்கி சரியாக பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள நேபாள அரசு அடுத்த மாதம் திருவிழா ஒன்று நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தியவில் வெளியிடப்பட்ட புதிய ரூ.2000, ரூ.500, ரூ.200  பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்த ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து நேபாள தகவல் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் கோகுல் பிரசாத் பஸ்கோடா கூறுகையில், இந்திய அரசால் வெளியிடப்பட்ட ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.  அது போன்ற உயர் மதிப்புடைய நோட்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக நூறு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.

இதனால் இந்தியாவில் இருந்து நேபாள நாட்டிற்கு செல்லும் இந்திய பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நூறு ரூபாய் நோட்டு மட்டுமே புழக்கத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bans higher denomination Indian Currency notes


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->